இலங்கையின் 21வது கடற்படை தளபதியாக சின்னையா 

296 0

இலங்கையின் 21வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா நேற்று பதவி ஏற்றார்.

கிழக்கு பிராந்திய கடற்படைக் கட்டளைத் தளபதியாக இருந்த சின்னைய்யா, இலங்கையின் புதிய கடற்படைத் தளபதியாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் நேற்றையதினம் அவர் தமது புதிய பதவியை ஏற்கும் நிகழ்வு கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது சம்பிரதாயபூர்வமாக, முன்னாள் கடற்படைத் தளபதி ரவிந்திர விஜேகுணரத்ன அட்மிரலுக்கான வாளை, ட்ரவிஸ் சின்னையாவிடம் கையளித்தார்.

Leave a comment