பயங்கரவாத தடை சட்டம் – 84 பேருக்கு எதிராக வழக்குகள் விசாரிக்கப்பட்டுகின்றன.

275 0

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், 84 பேருக்கு எதிராக வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மேலும் 12 சந்தேகத்துக்குரியவர்கள் தொடர்பான காவற்துறையினரின் விசாரணை அறிக்கைகளை சட்ட மா அதிபர் திணைக்களம் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கு, முன்னாள் பாதுகாப்பு செயலாளரை கொலை செய்ய முயற்சித்தமை, ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய முயற்சித்தமை உள்ளிட்ட பல வழக்குகளின் கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் அனுராதப்புரம் சிறையில் உணவுத் தவிர்ப்பை ஆரம்பித்த 3 பேர் தொடர்ந்தும் அந்த போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் நாவலபிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment