கண்டி தலதா மாளிகையின் தங்க கூரையினை புனர்நிர்மாணம் செய்வதற்காக 450மில்லியன் ரூபாவினை வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த தங்க கூரையை புனர்நிர்மாணம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளமையாலேயே இந்த பணத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலப்பகுதியில் இந்த கூரை நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

