பரீட்சை மோசடிக்காரர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

290 0

பரீட்சை மோசடிகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக பாகுபாடின்றி கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயங்களில் சில பல இலாபங்களுக்காக பாடசாலை மாணவர்கள் பழிகடாவாக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்று வரும் உயர்தரப்பரீட்சையின் இரசாயணவியல் வினாத்தாள் மோசடி தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற பரீட்சை மோடிகளை தடுப்பதற்கு பரீட்சைகள் திணைக்களம் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும்,இதன்மூலம் பரீட்சைகள் திணைக்களம் மீதான நம்பிக்கை கட்டியெழுப்பட்டுள்ள போதிலும், அதனை குழப்புவதற்கு சிலர் முயற்சிப்பதாகவும்,அதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் அமைச்சர் அகிலவிராஜ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment