பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கணினிகள்

438 0

அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபை அமர்வின் போது பயன்படுத்துவதற்கு கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இதன்பிறகு பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கும் ஆவணங்களை குறித்த கணினியின் மூலம் வழங்க முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த திட்டமானது அரச பணத்தை பயன்படுத்தாது வெளிநாட்டு உதவி ஒன்றின் மூலமே மேற்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, இதற்கு முன்னைய சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரை நிகழ்த்தும் ஒலிவாங்கி திருத்தப்பட்டு அதன் நிறம் மாற்றப்பட்டதுடன் வாக்களிக்கும் முறையும் இலத்திரனியல் முறைக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment