தனியார் மருத்துவ நிலையங்களின் கணக்கெடுப்பு அடுத்த வருடத்தில்-ராஜித சேனாரத்ன

299 0

வைத்தியர்கள் வசமிருக்கும் தனியார் மருத்துவ நிலையங்கள் தொடர்பிலான கணக்கெடுப்பொன்றை எதிர்வரும் வருடம் மே மாதம் நடாத்தவிருப்பதாக சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வின் போது ஐ.தே.கட்சி உறுப்பினர் புத்திக பதிரன எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாட்டில் பதிவுசெய்யப்பட்ட 205 மருத்துவ நிலையங்கள் இருப்பதாகவும் அவற்றில் 88 மருத்துவ நிலையங்கள் நீண்ட காலத்திற்கும் 117 மருத்துவ நிலையங்கள் குறுங்காலத்திற்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment