20 ஆவது சீர்திருத்த சட்ட மூலத்திற்கு வட மத்திய மாகாண சபை அனுமதி

311 0
சகல மாகாண சபைகளுக்கும் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவதற்கான அரசியசிலமைப்பின் 20வது சீர்திருத்த சட்ட மூலத்திற்கு வட மத்திய மாகாண சபை இன்று அங்கீகாரமளித்துள்ளது.
அதற்காக இடம்பெற்ற வாக்கெடுப்பில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 15 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
 ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும்  உறுப்பினர்கள் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன உள்ளிட்ட சுதந்திர கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

Leave a comment