நாட்டின் அனைத்து ஆரம்ப மற்றும் பிரதான வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
டெங்கு பரவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே குறித்த ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

