சேவைக்குத் திரும்பாத 777 இராணுவத்தினர் கைது

482 0

நாடு முழுவதும் இலங்கை இராணுவப் பொலிஸ் மற்றும் இலங்கைப் பொலிஸாரினால் இணைந்து மேற்க்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சேவைக்கு திரும்பாத 777 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுமுறைக்கு சென்று வேலைக்கு திரும்பாத இராணுவத்தினரே இவ்வாறு கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு இராணுவ அதிகாரி காணப்படுவதோடு, ஏனையவர்கள் படை வீரர்களாவர்.

இவ்வாறான தேடுதல் நடவடிக்கைகள் மேலும் தொடர்ந்தும் இடம்பெறும் என இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment