உயர்தர பரீட்சை இரசாயனவியல் வினாத்தாள் விவகாரம் – இரகசிய காவல்துறையிடம் ஒப்படைப்பு

397 0
உயர்தர பரீட்சையின் இரசாயனவியல் வினாத்தாளும், விடைகளும் முன்கூட்டியே வெளியானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளும் பொறுப்பு இரகசிய காவல்துறையினருக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் இரகசிய காவல்துறையினருக்கு பொறுப்பளிக்கப்பட்டதன் பின்னர், நேற்றைய தினம், இரகசிய காவல்துறை குழுவொன்று கம்பஹாவுக்கு சென்று விசாரணைகள் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரது சகோதரர் மற்றும் தந்தை ஆகியோர் நேற்று கந்தான பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
எனினும் சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் வகுப்பு ஆசிரியர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இராசாயனவியல் பாடத்தின் வினாத்தாள்களை ஒத்த மாதிரி வினாத்தாள்கள், கம்பஹா பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றை அண்டிய பகுதியில் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரால் காவல்துறையில் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டது.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment