தமக்கு எதிரான சர்வதேச பிடிவிறாந்தை மீளப்பெறவேண்டும் என்ற ரஸ்யாவுக்கான முன்னாள் தூதர் உதயங்க வீரதுங்கவின் கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதிவான் நிராகரித்தார்.
சர்ச்சைக்குரிய மிக் விமான பறிமாற்றம் தொடர்பில் உதயங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவர் வெளிநாடு ஒன்றில் ஒளிந்து வாழ்ந்து வருகிறார்
இதனையடுத்தே அவர் மீது சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உதயங்க வீரதுங்கவின் கோரிக்கையை நிராகரித்த கோட்டை நீதிவான் உதயங்கவின் ராஜதந்திர மற்றும் சாதாரண கடவுச்சீட்டுக்களை ரத்துச்செய்யுமாறும் உத்தரவிட்டார்

