உறுப்புரிமை இல்லாத ஒரு நபரை கட்சி தற்காலிகமாக இடைநிறுத்த முடியுமா? – அமைச்சர் டெனிஸ்வரன்

734 0

தாம் டெலோ கட்சியின் அங்கத்துவத்தை ஒருபோதும் பெற்றது கிடையாது என அமைச்சர் பா.டெனிஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தனது கட்சியின் அடிப்படை உரிமையினை தெழிவு படுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.

சிரேஸ்ட சட்டத்தரணியை தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) தனது செயலாளர் நாயகமாக வைத்துக்கொண்டு,சில நடவடிக்கைகளை நேற்றைய தினம் எடுத்துள்ளது.

குறிப்பாக தனது கட்சியின் அடிப்படை உரிமையினை எதிர் வரும் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக இடை நிறுத்துவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தான் ஒரு சட்டத்தரணி என்ற வகையில் ஒரு சில விடையங்களை மக்களுக்கு தெழிவு படுத்த வேண்டிய அடிப்படையிலும் சில சட்ட நகர்வுகளை மேற்கொள்ளலாம் என நினைக்கின்றேன் என வடமாகாண அமைச்சர் பா.டெனஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் எனது கட்சியின் அடிப்படை உரிமையினை நிறுபியுங்கள்.

அதன் பின்னர் சட்ட ரீதியாக உங்கள் யாப்பின் அடிப்படையில் இருக்கும் விதிகளுக்கு அமைவாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

 

Leave a comment