பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பது தடுக்கப்பட்டதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத செயல்களுக்கு நிதியளிப்பு, கருப்பு பணப்புழக்கம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முக்கியமான இந்த நடவடிக்கையால் காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி பெறுவது தடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

