இந்திய சுதந்திர தினத்திற்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து

221 0

இந்தியாவின் 70 சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நெருங்கிய நண்பர் மற்றும் அயல்நாடான இந்தியாவுக்கு இலங்கை சகல வழிகளிலும் எப்போதும் துணையிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தேசிய கொடியேற்றும் நிகழ்வு கொழும்பு இந்திய தூதரகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தியாவின் இசைக்கலைஞர் பிக்ரம் கோஸின் இசை நிகழ்ச்சியும் இன்று மாலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

Leave a comment