GMOA இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு

211 0

நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை அரசு கொள்வனவு செய்தமைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் தாம் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த வைத்தியசாலையை நிர்வகிப்பதற்காக அரசு வருடாந்தம் 3,000 மில்லியன் செலவிடுவதாகவும் இது ஹம்பாந்தோட்டை துறைமுக வருடாந்த வருமானத்தை விட அதிகமெனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

குறித்த நிதி ஒதுக்கீடானது வருடத்திற்கு 1,800 மில்லியன் வருமானம் பெரும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விட அதிகம் எனவும் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை கொள்வனவு செய்ததன் மூலம் அமைச்சர் ராஜித சேனாரத்ன நாட்டிற்கு பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் வைத்திய அதிகாரிகள் சங்க செயலாளர் ஹரித அலுத்கே மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment