பேரூந்து பிரத்தியேக ஒழுங்கை முறை நாளை மொரட்டுவை குருச சந்தியில் இருந்து கட்டுபெத்த வரையும், வெள்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகில் இருந்து பம்பலப்பிட்டிய சந்தி வரையும் செயற்படுத்தப்படவுள்ளது.
காலை 6 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை வார நாட்களில் மாத்திரம் இந்த பேரூந்து பிரத்தியேக ஒழுங்கை முறை செயற்படுத்தப்படவுள்ளது.
குறித்த காலப்பகுதியினுள் அந்த ஒழுங்கையில் வேறு வாகனங்கள் பயணிக்க அனுமதியளிக்கப்பட மாட்டாது என, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி தொடக்கம், கடுபெத்த சந்தியில் இருந்து மெலிபன் சந்தி வரையும், பம்பலப்பிட்டிய சந்தியில் இருந்து பித்தளை சந்தி வரையும் பேரூந்து பிரத்தியேக ஒழுங்கை முறை செயற்படுத்தப்படவுள்ளது.

