தெனியாய பல்லேகம சத்மால் நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று மதியம் 1.30 மணியளவில் நீராட சென்ற இளைஞர்கள் சிலரில் இவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) அவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில், பிரதேசவாசிகளின் உதவியுடன் தெனியாய காவற்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மது அருந்திவிட்டு நீராடிய இளைஞர்களில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் தெலிஜ்ஜவில பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய ஹசுன் சமீர என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

