நியுசிலாந்து அகதி அந்தஸ்து – இலங்கையர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சி

345 0
நியுசிலாந்தில் அகதி அந்தஸ்து பெற்றுக் கொள்ளும் இலங்கையர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் குடிவரவுத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
2016ம் ஆண்டு 23 பேரும், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 21 பேரும் இலங்கையில் இருந்துச் சென்று அகதி அந்தஸ்த்துக்காக விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களில் 5க்கும் குறைவானவர்களின் விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நியுசிலாந்தில் அதிக அகதி அந்தஸ்த்தைப் பெற்றுக் கொண்டவர்கள் சீனர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a comment