சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களை தொடர்புகொண்டு திருமணம் செய்துகொள்வதாக கூறி தங்கம் மற்றும் பண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவிசாவலை சீதாவாக்க பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மிரிஹான காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைச இவர் கiதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதுக்கை, களுத்துறை, தெஹிவளை போன்ற பிரதேசங்களில் இருந்து இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இந்த முறைபாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

