கடந்த வருடத்தில் இலங்கை முழுவதிலும் 38 ஆயிரத்து 875 கிலோ போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 2016ஆம் ஆண்டுக்கான காவல்துறை செயற்பாட்டு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் தகவல்களின் படிய, 36 ஆயிரத்து 817 கிலோ கஞ்சா, ஆயிரத்து 302 கிலோ கொக்கெய்ன், 205 கிலோ ஹெரோயின், 27 கிலோ ஹசிஸ், 15 கிலோ ஓபியம் மற்றும் 74 கிராம் மோபின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது மும்மடங்கு அதிகரிப்பாக அமைந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த வருடத்தில் போதைகொருட்களுடன் தொடர்புடைய 88 ஆயிரத்து 352 குற்றங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 98 சதவீதமான விசாரணைகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போதை பொருள் கடத்தல் சுற்றிவளைப்புகளில் காவல்துறை அதிரடிப்படை பெருமளவு பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

