இலங்கையில் இடம்பெறும் போதைப்பொருள் குற்றங்களை தடுக்க விசேட நடவடிக்கை மையம் 

339 0

இலங்கையில் இடம்பெறும் போதைப்பொருள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுப்பதற்கு காவல்துறையினால் விசேட நடவடிக்கை மையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.

காவல்துறை அதிரடிப்படையில் கீழ் இது இயங்கவுள்ளது.

போதைப்பொருள் கடத்தல், திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் பொது மக்கள் இந்த மையத்திற்கு தகவல் வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

தகவல் வழங்குகின்றவர்களின் தகவல்கள் இரகசியமாக பாதுகாக்கப்படுவதுடன், சரியான தகவல்களை வழங்குகின்றவர்களுக்கு வெகுமதிகளும் வழங்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment