விஜயதாசவின் நம்பிக்கையில்லா பிரேரணையில் யாரும் கைச்சாத்திடவில்லை

311 0

நீதிமன்ற மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது வெறும் செய்தி மாத்திரமே என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

எனினும், இதுவரை எந்தவொரு தரப்பினரும் அதற்கு கையெழுத்திடவில்லை என அவர் குறிப்பிட்டார்.

ரவி கருணாநாயக்க விலகிச் சென்றமை சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பதுடன், பண்டாரநாயக்கவுக்கு பின்னர் இதுவரை இவ்வாறான விலகிச் சென்ற சம்பவங்கள் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஹம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

Leave a comment