வாகனம் மோதி ஒருவர் பலி – நீர் மூழ்கியவரை காணவில்லை

519 0

பிலியந்தலை எனசால்வத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார். 

லொறியொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த செலுத்தனரும் பின்னால் பயணித்த இருவரும் படுகாயமடைந்து களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் பலியானார்.

லொறியின் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதேவேளை, தெனியாய, பல்லேகம, கொலவெனிகம பிரதேசத்தில் உள்ள சத்மால நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 5 பேரில் ஒருவர் காணாமல் போயுள்ளார். காணாமல் போனவர் தெலிஞ்சவில பகுதியைச் சேர்ந்த 26 வயதான நபர் என பொலிஸார் தெரிவித்தனர். பிரதேச வாசிகளும் கடற்படையினரும் தேடுதல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment