அதிதீவிர கிகிச்சை பிரிவு தாதியர் போதாமை காரணமாக ஆரம்பிக்கப்படாமல் உள்ளது

321 0

ஹட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலை அன்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கபட்டது. 

சகல வசதிகளும் கொண்ட இந்த வைத்தியசாலையில் தற்போது அதிதீவிர கிகிச்சை பிரிவு தாதியர் போதாமை காரணமாக ஆரம்பிக்கப்படாமல் உள்ளது. சுமார் ஒரே நேரத்தில் 10 பேர் தங்கி இருந்து சிகிச்சை பெறக் கூடிய கட்டில் வசதிகள் இருந்தும் அவை ஆரம்பிக்கபடாமை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் நான்கு இலட்சம் சனத்தொகையை கொண்ட ஹட்டன் பிரதேச மக்கள் பயனடைய கூடியதாக அமைக்கபட்ட இந்த வைத்தியசாலையில் 80% வீதமானோர் பெருந்தோட்ட தொழிலாளர்களாவர். இந்த வைத்தியசாலையில் உள்ள அனைத்து பிரிவுகளும் முறையாக இயங்க வேண்டுமானால் 104 தாதியர்கள் வேண்டும். ஆனால் தற்போது 60 தாதியர்கள் மாத்திரம் உள்ளனர்.

இவர்களில் சத்திரகிசிச்சை பிரிவிற்கு ஆண் பெண் தாதியர் 12 பேரும்¸ அதிதீவிர சிகிச்சை பிரிவிற்கு 08 பேரும். குழந்தை பேறு பிரிவிற்கு 06 பேரும்¸ அவசர சிகிச்சை பிரிவிற்கு 04 பேரும் கண் சிகிச்சை பிரிவிற்கு 08 பேரும் ஏனைய சிகிச்சை பிரிவுகளுக்கு 06 அடங்கனாக 44 தாதியர்கள் தேவை உள்ளது.

இந்த தேவை குறைபாடு காரணமாக மேற்படி சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

இதனால் நாளாந்தம் வைத்திய சேவைக்காக செல்லும் மக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அதிதீவிர சிகிச்சை பிரிவில் 10 கட்டில்கள் காணப்பட்ட போதும் அதுவும் ஆரம்பிக்கபடவில்லை.

இந்தநிலையில், நிலமையினை வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி வைத்தியர் எஸ்.விஜேதுங்க அவர்கள் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தவைவருமான் வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அதன் பின்னர் இராஜாங்க அமைச்சர் வைத்தியசாலைக்கான விஜயம் ஒன்றினை மேற்க் கொண்டு நிலமையை நேரில் கேட்டு அறிந்து உடனடியாக சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காகிம் அவர்களிடம் தொடர்பு கொண்டு தற்போது குறைபாடாக இருக்கும் 44 தாதியர்களை நிமிக்க நடவடிக்கையை மேற்க் கொண்டார். எதிர்வரும் நாட்களில் வைத்திய சேவைக்கு பெருந்தொகையான தாதியர் நியமனம் வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் போது கட்டாயம் 44 தாதியர்கள் இந்த வைத்தியசாலைக்கு நியமிக்கபடுவார்கள் என சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் அவர்கள் உறுதியளித்துள்ளார்.

Leave a comment