நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவது தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் புதன் கிழமை கூடவுள்ள மத்திய செயற் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது.அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் இதனை எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது அது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

