டெனீஸ்வரன் இன்று தீர்மானத்தை அறிவிப்பார்?

304 0
வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் இன்று தமது தீர்மானத்தை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டெலோ இயக்கம் கடந்த 12ஆம் திகதி கூடிய நிலையில், டெனிஸ்வரன் அமைச்சு பதவியில் இருந்த விலக வேண்டும் என தீர்மானித்தது.
அதன்படி அவருக்கு 24 மணி நேர கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று பா.டெனிஸ்வரன் தமது தீர்மானத்தை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இன்று அவர் தமது அமைச்சு பதவியில் இருந்து விலகவில்லை என்றால் அவரை பதவி நீக்குவது குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என டெலோ இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

Leave a comment