நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவுக்கு எதிராக கொடுவரப்பட உள்ள நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு, ஒன்றிணைந்த எதிர்கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிபந்தனைகள் இன்றி அவருக்கு ஆதரவளிக்க தாயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலக தயார் என்றால், ஒன்றிணைந்த எதிர்கட்சியில் இணைவதை தவிர்த்து ஜனாதிபதியுடன் இணையுமாறு நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு இராஜாங்க அமைச்சர் டிலான் பேரேரா அழைப்பு விடுத்துள்ளார்.
பதுளை – ஹாலிஎல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.
ஒன்றிணைந் எதிர்கட்சியினர் சந்தர்ப்பத்திற்கமையவே செயற்படுகின்றனர் என தெரிவித்த அவர், ஒன்றிணைந்த எதிர்கட்சியில் உள்ள அனைவரும் விஜேதாச ராஜப்ஷவை ஏற்று கொள்ள போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

