வெளிநாட்டு சக்திகளின் தேவைகளுக்காகவே இலங்கையின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இதனை தெரவித்தார்.
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியான பென் எமர்ஷன் இலங்கை வந்திருந்தார்.
இதன்போது நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேசம் தலையிடக் கூடாதென தெரிவித்திருந்தார்.
இதனை எதிர்ப்பு தெரிவித்து தற்போது விஜேதாச ராஜபக்ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

