ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் தமது பதவிகளை விட்டு விலகி ஒன்றிணைந்த எதிர்கட்சியில் இணையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜப்பக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
தம்புள்ள பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.
முன்னாள் தமது மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் தற்போது, அரசாங்கத்திற்குள்ளேயும் சுமத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
ஒவ்வொருவருக்கும் இடையில் நம்பிக்கையில்லா பிரேரணைகள் முன்வைக்கப்படுகின்றன.
இதுவே தற்போது நாட்டில் நிலவும் நிலை.
நாட்டின் வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
எனினும் இதனால் தமக்கெந்த இலாபங்களும் இல்லை என அரசாங்கம் கூறுகிறது.
எனவே இதனை விசாரணை செய்வதற்கும் ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் மகிந்த ராஜப்பக்ஷ குறிப்பிட்டார்.

