இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் 3வதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் இன்று நிறைவு பெற்றது.
இன்றை நாள் ஆட்டம் நிறைவடையும் போது தமது 2வது இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வரும் இலங்கை அணி 1 விக்கட்டை இழந்து 19 ஓட்டங்களை பெற்றிருந்தது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி சகலவிக்கட்டுக்களையும் இழந்து 487 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி சார்பில் ஷிகர் தவான் 119 ஓட்டங்களையும் ஹர்டிக் பாண்டியா 108 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்று கொடுத்தனர்.
இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி 135 ஓட்டங்களுக்குள் சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
இலங்கை அணி சார்பில் தினேஸ் சந்திமல் 48 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று கொடுக்க, ஏனை வீரர்கள் குறிப்பிடத்தக்களவில் பிரகாசிக்க வில்லை.
இதனையடுத்து இலங்கை அணியை பொலோ-வேன் முறைமூலம் துடுப்பாட இந்திய அணி அழைத்தமை குறிப்பிடத்தக்கது.

