விஜயகலாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீண்டநேரம் விசாரணை

256 0

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

வித்தியா கொலை வழங்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமாரை பொலிஸ்சில் பெறுப்பளிக்காது தப்பவிட்டமை தொடர்பில் விஜயகலாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீண்டநேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று (9) பிற்பகல் 3 மணியளவில் அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானார்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் சிவலோக நாதன் வித்தியா படுகொலை தொடர்பில் பிரதான சந்தேகத்திற்குரியவரான சுவிஸ் குமார், பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு மின்கம்பத்தில் கட்டிவைத்திருந்த நிலையில், அவரை தப்பவிடுவதற்கு விஜயகலா மகேஸ்வரன் உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சரிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஊர்காவல்துறை நீதவான் இரகசிய காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். இதன்படியே அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a comment