கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹர நிகழ்வு இடம்பெற்ற காலப்பகுதியினுள் கண்டி நகர எல்லைக்குள் முந்தைய வருடத்துடன் ஒப்பிடும் போது குப்பை சேர்வது குறைவடைந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.கண்டி நகர ஆணையாளர் சந்தன தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.
குப்பை கொட்டுதல் தொடர்பில் முன் அறிவிப்பு செய்யப்பட்ட நிலையில் இந்த குறைவு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழமையாக கண்டி நகர பகுதியில் நாளொன்றுக்கு 120 தொன் குப்பைகள் சேரும் எனவும் நகர ஆணையாளர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், இன்றைய தினம் கண்டி நகரத்தில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

