இலங்கையர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும்-ரணில்

428 0

இனங்களின் தனித்துவத்தை பாதுகாத்துக் கொண்டு இலங்கையர்கள் என்று ஒன்றுபட்டு வாழ வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற முன்னாள் சபாநாயகர் அல்ஹாச் பாக்கீர் மாக்காரின் 20ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்ட போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர் அனைவரும் ஓரின மக்கள் என்றே தேசிய கீதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் தத்தமது இன அடையாளங்களுடன் ஒன்றுமையாக வாழ வேண்டும்.

இலங்கையை சிங்கள நாடென்றோ, வடக்கு – கிழக்கை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்றோ கோஷம் எழுப்பி வந்தால் பிரதேச ரீதியாக வேலிகளை இட்டே வாழ வேண்டி நிலை ஏற்படும்.

ஒருப்போதும் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment