நாட்டின் கலாசாரம் மற்றும் மரபுகள், சட்டத்திற்கும் பார்க்க மக்களிடம் பிரசித்தமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எசல பெரஹரவை முன்னிட்டு கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் கலாசாரம் மற்றும் பண்புகளும் மரபுகளும் போற்றத்தக்கது.
அது நாட்டின் சட்டங்களைவிடவும் மக்களிடம் செல்வாக்கு செலுத்தும் ஒன்றாக காணப்படுகின்றது.
அரசாங்கம், அரசியல் கட்சி என்பவற்றைவிட கலாசாரம் மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ளது.
உலகில் எத்தகைய தொழிநுட்ப வளர்ச்சி ஏற்பட்டிருப்பிலும் பாரம்பரிய சிறப்பு மிக்க கலாசாரத்தை கொண்டுள்ளவர்கள் என்ற வகையில் நாங்கள் பெருமைக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

