2017ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பிரதேச செயலகங்களிலும், கிராம உத்தியோகத்தர் அலுவலங்களிலும், மாகாண சபை அலுவலகங்களிலும், எதிர்வரும் வியாழக்கிழமை முதல் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது.
வாக்காளர் இடாப்புக்களில் பொருத்தமற்றவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தால், அது தொடர்பான எதிர்ப்புக்களை தெரிவிக்க அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை காலாவகாசம் வழங்கப்படவுள்ளது என்று மேலதிகத் தேர்தல் ஆணையாளர் எம். எம் முஹமட் தெரிவித்துள்ளார்.
பெயர்ப் பட்டியலில் தமது பெயர் இடம்பெறாதவர்களும் இந்த சலுகையை பயன்படுத்த முடியும் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு அடுத்த மாதம் 30ஆம் திகதி வரை உறுத்திப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

