அனைத்து பல்கலைக்கழக பிக்குமார் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் டெம்பிடிய சுகதானந்த தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரால் முன்வைக்கப்பட்ட மீளாய்வு மனுவை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதற்கமைய இவரை 10,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் மூன்றில் விடுவிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

