சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கை நவீன தொழில்நுட்ப முறையில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இவ்வபிவிருத்தி திட்டம் டிசம்பர் மாத அளவில் ஓடுபாதைகளை வீர, வீராங்கனைகளிடம் கையளிக்கும் விதத்திலே மேற்கொள்ள உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சுகததாச தேசிய விளையாட்டு தொகுதி அதிகாரசபை சட்ட மூலம் இன்று பாராளுமன்றில் விவாதத்திற்காக முன்வைக்கப்பட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதில் மாகாண ரீதியிலான மைதானங்கள் ஒன்பது உட்பட மாகாண மற்றும் மாவட்ட ரீதியிலான மைதானங்கள் நிர்மாணிக்கப்பட்ட உள்ளதாகவும், இவற்றை பராமரிப்பதில் பாரிய சிக்கல்களை முகங்கொடுப்பதாகவும் அமைச்சர் ஜயசேகர தெரிவித்தார்.
இதற்கு பிரதான கரணம் தகுதி வாய்ந்த அதிகாரிகள் போதிய அளவு காணப்படாமையும் விளையாட்டு உபகரணங்கள் காணப்படாமையுமே என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

