மஹிந்த அணி தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசேட கலந்துரையாடல்

207 0
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்தக் கோரிக்கையை விடுவிக்க எதிர்பார்ப்பதாக அதன் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளுக்கு முன்னதாக முற்பகல் 1.00 மணியளவில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதன்போது, நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இதனிடையே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த அணி தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமொன்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் தற்போது இடம்பெறுகின்றது.
இந்தக் கூட்டத்திலும், நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளதாக தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment