வட மத்திய மாகாண சபையில் குழப்ப நிலை

209 0
ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள், மத்திய மாகாண சபையின் புதிய தவிசாளர் டீ.எம்.அமரதுங்கவுக்கு எதிர்ப்பு வெளியிட்டதனால், இன்றைய சபை அமர்வில் குழப்ப நிலை ஏற்பட்டது.
ஒன்றிணைந்த எதிரணியின் 14 உறுப்பினர்களும், கறுப்பு பட்டி அணிந்து சபை அமர்வில் பங்கேற்றுள்ளனர்.
சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, புதிய தவிசாளரின் நியமனத்துக்கு முன்னாள் சுகாதார அமைச்சர் கே.எச்.நந்தசேன எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
இதன்போது, குறித்த நியமனமானது சபையின் இணக்கப்பாட்டுக்கு அமைய இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் அனில் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சபையின் மத்திய பகுதிக்குச் சென்ற ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள், சபையின் இன்றைய ஒழுங்கு பத்திரத்துக்கு தீ வைத்துள்ளனர்.
இதையடுத்து, அவர்கள் சபையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
எனினும், இன்றைய சபை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave a comment