மலேசியாவில் பல இலங்கையர்கள் கைது

206 0
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது, தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்பு கொண்டதாக சந்தேகிக்கப்பட்டு இலங்கையர்கள் சிலர் கைதாகியுள்ளனர்.
மலேசிய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்கின்ற நிலையில், மலேசியாவில் பாரிய தீவிரவாத முறியடிப்பு தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதன்போது 400க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் பல இலங்கையர்களும் அடங்குவதாக மலேசியாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலோனோர் கைது செய்யப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டப் போதும், இன்னும் சிலர் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment