குப்பையின் மூலம் மின்சாரம்: கம்பஹாவில் புதிய திட்டம்

199 0

குப்பை கூளங்களைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் வேலைத்திட்டமொன்று நாளை மறுதினம் (10) கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

மா நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தின் முதற்கட்டப் பணிகள், நாளை மறுதினம் கெரவலப்பிட்டியவில் ஆரம்பமாகவுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்பிரகாரம், மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இரண்டு மின் நிலையங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்படும்.

இந்த இரு மின் நிலையங்களின் மூலம் 20 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதுடன் இதன் நிர்மாணப் பணிகள், 18 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும்.

இலங்கையில் முதற்தடவையாக, குப்பைகளைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment