ஜனாதிபதியின் வாக்குறுதி உண்மையா? பொது பொதுமக்கள் இன்று அறிந்துகொள்வர்-பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் ஒன்றியம்

224 0

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பொதுமக்களுக்கு பொய்கூறுகிறாரா? அல்லது உண்மை கூறுகிறாரா? என்பதை பொதுமக்கள் அனைவரும் இன்று அறிந்துகொள்ள முடியும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை தனியார் நிறுவனத்துக்கு கையளிக்கும் முன் அங்குள்ள எண்ணெய் தாங்கியை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு வழங்குமாறு விடுக்கப்பட்ட யோசனையை ஜனாதிபதி இன்று அமைச்சரவைக்கு முன்வைக்க உறுதியளித்துள்ளதாக, அவ்வொன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.

மேலும் அவ்யோசனையை இன்று அமைச்சரவைக்கு முன்வைத்து அதனை அது தொடர்பான ஒப்பந்தத்தில் உள்வாங்கப்பட்டதன் பின் அவ்வொப்பந்தத்திற்கான அமைச்சரவை அங்கீகாரத்தை அமைச்சரவையில் பெற்றுத்தருவதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்ததாக அவ்வொன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் இவ்வுறுதிப்பாடு அமைச்சரவையில் நிராகரிக்கப்பட்டால் அல்லது நிறைவேற்றப்படாவிடின் நாடு தழுவியரீதியில் பெற்றோலிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் இவ்வுறுதிப்பாடு நிறைவேற்றப்படும் என நாட்டை ஆதரிக்கும் பொதுமக்களும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களும் ஆவலோடு காத்திருப்பதாகவும் அதேவேளை, இவ்வுறுதிப்பாட்டை நிராகரிப்பவர்கள் நாட்டின் துரோகிகள் என்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் டி.ஜே.ராஜகருணை மேலும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை கூட்டம் இன்று பிற்பகல் இனம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment