காணி அபகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

318 0

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்துவதுடன் அபகரிக்கப்பட்ட தமது காணிகளை மீட்டுத்தருமாறு கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய பொதுமக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது காணியை மீட்டுத்தருமாறு கோசங்களை எழுப்பிய பொதுமக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் பாராமுகமாக இருப்பதாகவும் கவலை தெரிவித்தனர்.

‘இருப்பதையும் இழப்பதா? நல்லாட்சி தமிழருக்கு தந்த பரிசு, பிரதேச செயலாளரே அநீதியின் பக்கம் சோரம்போகாமல் எமக்கு நீதிபெற்றுத்தருவீர்கள் என நம்புகின்றோம் மாணவர்களுக்கு சொந்தமான மைதானத்தை மீட்டுத்தாருங்கள், எமது பிரச்சினைகளை தீர்த்து தராத அரசியல்வாதிகள் இருந்தும் என்ன பயன்? போன்ற சுலோகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

இதன்போது வாழைச்சேனை பிரதேச செயலாளர் வாசுதேவனிடம் மகஜர் ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் கையளிக்கப்பட்டது.
இது தொடர்பில் முடிந்த நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாக பிரதேச செயலாளர் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் உறுதியளித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment