யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவில் பகுதியில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு தமிழ் பொலிஸ் உட்பட ஐந்து பொலிசார் கைது செய்யப்பட்டனர்.
குறித்த மாணவர்கள் பொலிசார் நிற்பதை அவதானிக்காது சென்ற போதுஅவர்கள் மீது அங்கு கடமையில் நின்ற பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் ஒரு மாணவன் காயமடைந்ததுடன் மோட்டார் சைக்கிளையும் மதிலுடன் மோதியுள்ளான். துப்பாக்கிக் காயம் பட்ட மாணவன் சம்பவ இடத்தில் மரணமடைந்ததால் கடும் பதற்றமடைந்த பொலிசார் மோட்டார் சைக்கிளில் வீழ்ந்து காயமடைந்த மற்றைய மாணவனை பிடித்து தலையை மதிலுடன் மோதிக் கொலை செய்ததாக சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பிணை கோரியிருந்தனர் அப்பிணையானது நிராகரித்து 24 ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது .கைது செய்யப்பட்ட 5 பொலிஸாசாரை 22 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

