அமைச்சர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் சில நாட்களுக்குள் பதவி விலகுவார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.கட்சியினதும், அரசினதும் கௌரவத்தை பாதுகாப்பதற்காக அமைச்சர் ரவி சிறந்த முடிவினை எடுப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டுஎதிரணி அமைச்சர் ரவிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதற்கு அவசியம் இல்லை என்று தான் நினைப்பதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்ற ரீதியில் ஜனாதிபதியிடமும், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பிரதமரிடமும், அமைச்சர் ரவியை பதவி விலகுமாறு தெரிவிக்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

