சகலருக்கும் உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் – ராஜித 

288 0

இனவாதிகள் குறித்து பயப்படாமல் சகல இனத்தவர்களுக்கும் அனைத்து உரிமைகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சிலாபம் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் காரணமாக வடக்கில் வாழ்ந்த தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினால் இரண்டு
மணித்தியாலயத்திற்குள் வடக்கிலிருந்து துரத்தப்பட்டனர்.
இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் கடந்த 30 வருடமாக புத்தளம் பிரதேச முகாம்களில் வாழ்ந்து தற்போது யுத்தம் நிறைவடைந்த பின்னர் சொந்த இடங்களில் வாழப்போகும் குறித்த மக்களுக்கு அரசு வசதிகளையும், பாதுகாப்பையும் வழங்கவேண்டியது அவசியம் என்றும் அமைச்சர் ராஜித குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment