அரசியல் கைதிகளின் விடுதலைக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

369 0
வவுனியாவில் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் சிறையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஆர்ப்பாட்டம் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா.சக்திவேல் தலைமையில் நடைபெற்ற வருகிறது.
ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கைதிகளான நிமலரூபன், டிலருக்சன் சிறையில் சிறையில் கொல்லப்பட்ட ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அவர்களை நினைவு கூர்ந்து தீப்பந்தம் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட அரசியல் கைதிகளுக்கான நினைவேந்தல் நாளான இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும், இராணுவ முகாம்கள் அகற்றப்படவேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், இனப்பிரச்சனைக்கு அரசில் தீர்வை முன்வைக்க வேண்டும் பேன்ற கோரிக்கையை ஆர்ப்பாட்டகாரர்கள் அரசிடம் முன்வைத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் மா.தியாகராஜா உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

Leave a comment