போகோ ஹராம் தீவிரவாதிகள் 31 மீனவர்களை கொலை செய்துள்ளனர்

312 0
நைஜீரியாவின் ஷெட் விலே பிரதேசத்தில் அமைந்துள்ள தீவு பகுதி ஒன்றில் வைத்து 31 மீனவர்கள் போகோ ஹராம் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த படுகொலை சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ள போதிலும் தொலை தொடர்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் நேற்றைய தினம் இது தொடர்பில் தெரியவந்துள்ளது.
குறித்த தீவு பகுதி மக்கள் போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு எதிர்ப்பு வெளியிடுவதன் காரணத்தினால் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் நைஜீரிய இராணுவமோ அந்த நாட்டு அதிகாரிகளோ இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் உத்தியோக பூர்வமான அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment