விசேட தேவையுடைய இராணுவத்தினர் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

342 0
பல கோரிக்கைகளை முன்வைத்து விசேட தேவையுடைய இராணுவத்தினர் சிலர் தற்போது கொழும்பு கோட்டையில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டத்தின் காலி முகத்திடல் நுழைவு வாயில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினரின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம் இன்று காலை கொழும்பில் எதிர்ப்பு போராட்டம் ஆரம்பித்தது.
தமது கோரிக்கைகளுக்கு இதுவரையில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என தெரிவித்தே  போராட்டம் இடம்பெறுவதாக அந்த இயக்கத்தின் தலைவர் யூ.டி வசந்த எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னால் இருந்து ஜனாதிபதி செயலகம் வரையில் பாதயாத்திரை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இன்று அதிகாலை முதல் காலி முகத்திடம் நுழைவு வாயிலான லோட்டஸ் சுற்றுவட்டம் தொடக்கம் ஜனாதிபதி செயலகம் வரையில் காவல்துறை கழகம் அடக்கும் பிரிவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment