பயங்கரவாத எதிர்ப்பு உயர்மட்ட கலந்துரையாடல் கொழும்பில் 

323 0
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சர்வதேச குற்றத் தடுப்பு தொடர்பான தெற்கு மற்றும் தெற்காசிய நாடுகளின் உயர்மட்ட கலந்துரையாடலொன்று கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச காவல்துறையினர் மற்றும் இலங்கையின் காவல்துறையினரும் இணைந்து இதனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதிவரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த மாநாடு இடம்பெறுகின்றது.
பயங்கரவாத தடுப்பு தொடர்பில் பொது மூலோபாயமொன்றை உருவாக்குவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a comment